'ஓ.பி.எஸ். மாடு பிடி வீரரா? காளைகளை அடக்கியுள்ளாரா?' : ஓபிஎஸை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைப்பது குறித்து துரைமுருகன் கேள்வி ; சட்டப்பேரவையில் சிரிப்பலை

சென்னை :ஓபிஎஸை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள். அவர் எப்போது மாடு பிடித்தார் என சட்டப்பேரவையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியது சிரிப்பலையை உண்டாக்கியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று  பட்ஜெட் குறித்து 2ம்  நாள் விவாதம் நடைபெற்றது. துணை முதல்வரும் அ.இ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகர் என்று அ.இ.தி.மு.கவினர் அழைத்து வருகின்றனர். இந்த அடைமொழியைக் கட்சி சுவரொட்டி மற்றும் பேனர்களில் காண முடிகிறது.

Advertising
Advertising

இந்நிலையில் பேரவையில் பேசிய விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் பெயரை குறிப்பிடும் போது ஜல்லிக்கட்டு நாயகர் என்று புகழாரம் சூட்டினார்.அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், துணை முதல்வர் என்ன மாடுபிடி வீரரா ? இதற்கு முன் எப்போதாவது காளைகளை அடக்கி இருக்கிறாரா என்று கேட்டதும் அவையில் சிரிப்பு அலைகள் எழுந்தன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு ஓ.பி.எஸ். காளைகளை அடக்கினால் அதனை நேரில் வந்து பார்ப்பதற்கு அவை உறுப்பினர்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார்.

இதற்கு பதில் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு காக தமிழகமே போராடிய போது, அதற்காக சிறப்பு அனுமதியை பெற்று தந்ததால் தங்களது உறுப்பினர்கள்  பன்னீர் செல்வத்தை அன்போடு அழைப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories: