எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு மலேசிய மணல் 55 ஆயிரம் டன் வருகிறது: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு மலேசியாவில் இருந்து 55 ஆயிரம் டன் மணல் கப்பல் மூலம் வருகிறது. இந்த மணல் இன்னும் 10 நாட்களுக்குள் எண்ணூர் துறைமுகத்துக்கு வந்து சேரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் ஆற்றுமணல் தட்டுப்பாட்டை தற்போது மலேசிய நாட்டில் இருந்து மணல் கொண்டு வரப்படுகிறது. அந்த மணல் எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகம், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 8 முறை கப்பல்கள் மூலம் மணல் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, காட்டுபள்ளியில் அதானி துறைமுகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு 55 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், அங்கு 35 ஆயிரம் டன் மணல் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே 8வது கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து மீண்டும் மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஒப்பந்த நிறுவனம் சார்பில் மணல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மணல் 10 நாட்களில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: