தமிழக மின்வாரியத்தில் 600 உதவி பொறியாளர் பணியிடம் நேரடி நியமனம்

சென்னை: தமிழக மின்வாரியத்தில் 600 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உதவிபொறியாளர் மின்னியல்-400, இயந்திரவியல்-125, கட்டடவியல்-75 என மொத்தம் 600 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்து கணினி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்கள், ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலை இழந்த பணியாளர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியமாக 39,800-1,26,500 வழங்கப்படும். விண்ணப்பங்கள் இணையம் மூலமாக சமர்ப்பிப்பதற்கான கடைசிநாள் 16.3.2020 ஆகும். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசிநாள் 19.3.2020. தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் நாள், தேர்வு நடத்தும் அமைப்பு ஆகிய தகவல்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: