அதிமுக கட்சி வளர்ச்சி பணி குறித்து நெல்லை, சென்னை உள்ளிட்ட 14 மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

சென்னை: அதிமுக கட்சி வளர்ச்சி பணி குறித்து நேற்று நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை நடத்தினர். அதிமுக கட்சியின் வளர்ச்சி பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிமுகவில் மொத்தமுள்ள 56 மாவட்டங்களில் 28 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் ஆலோசனை நடத்தினர். 3வது நாளாக நேற்று மதியம் திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு ஆகிய 7 மாவட்ட நிர்வாகிகளுடன், மாலையில் விழுப்புரம் வடக்கு, விழுப்புரம்

தெற்கு, வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு ஆகிய 14 மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை நடைபெற்றது.

இன்று 4வது நாளாக, தேனி, அரியலூர், தர்மபுரி, கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் மற்றும் சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் ஆகிய 14 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.இந்த கூட்த்தில் பங்கேற்ற மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு, கட்சியில் உள்ள குறைகள் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

வேலூர் மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி

அதிமுக கட்சி வளர்ச்சி குறித்து நேற்று 3வது நாளாக திருநெல்வேலி, வேலூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 14 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்எல்ஏவை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரக்கோணம் ஒன்றிய செயலாளர் பா.பழனி தலைமையில் நிர்வாகிகள் சிலர் அதிமுக கட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் அவர்களை உள்ளே நழைய அனுமதிக்கவில்லை.

பின்னர் அவர்களில் சுமார் 50 பேர் கட்சி தலைமை அலுவலகம் அருகே நீண்டநேரம் காத்திருந்தனர். மாலையில் கூட்டம் முடிந்ததும் முதல்வர் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்களது காரை வழிமறித்து தங்களது கோரிக்கையை மனுவாக அளித்தனர்.அந்த மனுவில், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி, தக்கோலம் நகர செயலாளர் ஜெ.பச்சையப்பன் ஆகியோர் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுகவின் உண்மையான தொண்டர்களை புறக்கணித்து வருகிறார்கள். இவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: