பள்ளிக்கல்வி கல்வி துறைக்கு ரூ.34,182 கோடி

பள்ளிக்கல்வி துறைக்கு வரவு-செலவுத் திட்டத்தில் அதிகபட்சமாக 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தகப்பைகள், பள்ளிச் சீருடைகள், காலணிகள், குறிப்பேடுகள், பாடப்புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் மற்றும் வண்ண பென்சில்கள் ஆகிய படிப்புக்கு தேவையான பொருட்களை விலையின்றி வழங்குவதன் மூலம், குழந்தைகளை பள்ளியில் தக்க வைப்பதை அரசு உறுதி செய்கிறது.  இந்த திட்டத்திற்காக ரூ.1,018.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கும் அரசால் மடிக்கணினி வழங்கப்படும்.  இதற்கென, 2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.966.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * ஏழை மாணவர்களும் உயர்கல்வியினை பெறும் வகையில், முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி கட்டண சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக ரூ.506.04  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், உயர்கல்வி துறைக்கு ரூ.5,052.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எரிசக்தி துறைக்கு 20,115.58 கோடி நிதி ஒதுக்கீடு

தென் மாவட்டங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கட்டமைப்பில் இணைப்பதற்கும், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில் உள்ள மின்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், 765 கிலோவோல்ட் மற்றும் 400 கிலோவோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் மேம்படுத்துவதற்கும், ஒட்டப்பிடாரத்தில் 400 கிலோவோல்ட் திறன் மற்றும் விருதுநகரில் 765 கிலோவோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டம், 4,650 கோடி ரூபாய் மொத்த செலவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 45.1 கோடி அமெரிக்க டாலர் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தியாகராய நகர் பகுதியில் 1.41 லட்சம் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சென்னை நகரின் பிற பகுதிகளுக்கும் இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாகப் பொருத்தப்படும்.    

* மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்திற்கு கடந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டத்தில் 50 சதவீதத்தை ஈடு செய்வதற்கு 2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.4,265.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய இரு கழகங்களின் நிதி மற்றும் இயக்க செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்காக ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ள அரசு நிதியுதவி வழங்கும். 2020-21ம் ஆண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.20,115.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: