சென்னை மாவட்டத்தில் 39 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியல் வெளியீடு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று ஆணையர் பிரகாஷ் வெளியிட்டார். இதன்படி சென்னையில் மொத்தம் 39.46 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 2020 ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்தது. அதன்படி கடந்த டிசம்பர் 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில்  38,88,673 வாக்காளர்கள் இருந்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. மேலும் கடந்த 22ம் தேதி வரை ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதன்படி 65,215 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். இதில் ஆண்கள் 31,158, பெண்கள் 34,031, இதர பிரிவினர் 26 பேர்.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு 28,728 ஆண்கள், 31,151 பெண்கள், 26 இதர பிரிவினர் உள்ளிட்ட 59,905 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் செய்த ஆய்வின் அடிப்படையிலும் பெயர் நீக்குவதற்காக படிவம் 7 அளித்தவர்களின் அடிப்படையில் 3,384 விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 890 ஆண்கள், 894 பெண்கள், 2 இதர பிரிவினர் உள்ளிட்ட 1786 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 2020ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆணையர் பிரகாஷ் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இதில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக வெங்கடேஷ் பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேஷ் மற்றும் பாஜ, தேமுதிக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த வாக்காளர் பட்டியல்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 39,46,792 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 19,43,556, பெண்கள் 20,02,223, இதர பிரிவினர் 1013. கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட 58,119 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19,686 பேர் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்த பட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,73,337 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் 3,06,347 வாக்காளர்களும் உள்ளனர்.  நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், துணை ஆணையருமான குமரவேல் பாண்டியன், தேர்தல் பிரிவின் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மண்டல அலுவலகம் வாக்குச்சாவடி மையங்களிலும், இந்திய தேர்தல் ஆணையத்தின்  www.election.tn.gov.in இணையதளத்திலும் பட்டியலை பார்வையிடலாம்.

வ.

எண்    சட்டமன்ற

தொகுதியின் பெயர்    ஆண்கள்    பெண்கள்    3ம்

பாலினம்    மொத்தம்

1    டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர்    1,23,147    1,32,132    102    2,55,381

2    பெரம்பூர்    1,49,076    1,53,440    65    3,02,581

3    கொளத்தூர்    1,34,286    1,39,470    65    2,73,821

4    வில்லிவாக்கம்    1,23,784    1,28,301    62    2,52,147

5    திரு.வி.க நகர் (தனி)    1,04,327    1,10,561    51    2,14,939

6    எழும்பூர் (தனி)    92,315    93,921           54           1,86,290

7    ராயபுரம்    90,175    93,779    49    1,84,003

8    துறைமுகம்    90,333    82,952    52    1,73,337

9    சேப்பாக்கம்-

திருவல்லிக்கேணி    1,13,079    1,17,181    29    2,30,289

10    ஆயிரம்விளக்கு    1,16,167    1,21,113    86    2,37,366

11    அண்ணாநகர்    1,36,897    1,41,439    81    2,78,417

12    விருகம்பாக்கம்    1,39,262    1,39,598    84    2,78,944

13    சைதாப்பேட்டை    1,35,115    1,39,729    72    2,74,916

14    தியாகராயநகர்    1,16,111    1,18,899    42    2,35,052

15    மயிலாப்பூர்    1,27,707    1,35,219    36    2,62,962

16    வேளச்சேரி    1,51,775    1,54,489    83    3,06,347

மொத்தம்    19,43,556    20,02,223    1,013    39,46,792

* கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட 58,119 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19,686 பேர் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள்.

16 சட்டமன்ற தொகுதிகளில்

மொத்த வாக்காளர்கள்

ஆண்கள்    பெண்கள்    இதரர்    மொத்தம்

19,43,556    20,02,223    1013    39,46,792

வேளச்சேரியில் அதிக வாக்காளர்கள்

ஆண்கள்    பெண்கள்    இதரர்    மொத்தம்

1,51,775     1,54,489    83    3,06,347

துறைமுகத்தில் குறைந்த வாக்காளர்கள்

ஆண்கள்    பெண்கள்    இதரர்    மொத்தம்

90,333    82,952    52    1,73,337

Related Stories: