×

உலகிலேயே மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிப்பு

மேகாலயாவில் உலகின் மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள ஜெய்ன்டியா மலைப்பகுதியில் ஸ்காட்லாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கிருந்த குகையில் அவர்கள் ஆராய்ச்சி செய்த போது, புதியவகை மீன்களைக் கண்டனர். இந்த மீன்கள் இமாலய ஆறுகளில் உள்ள கோல்டன் மஷீர் வகை மீன்களுடனான பண்புகளை ஒத்திருந்தன. ஆனாலும் இவை தனி இனமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடி மீன் இனங்களிலேயே தற்போது பார்க்கப்பட்ட மீன்கள்தான் மிகவும் பெரியவை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நிலத்தடி மீன்களின் சராசரி அளவு எட்டரை சென்டி மீட்டர் வரை இருந்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மேகாலயா மீன்கள் 30 சென்டி மீட்டர் வரை இருப்பதால் உலகிலேயே மிகவும் பெரிய நிலத்தடி மீன்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன.



Tags : world , World's largest underground fishes have been discovered in Meghalaya.
× RELATED சென்னை விமானநிலையத்தில் உற்சாக...