முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20,000 வீடுகள் கட்டித்தரப்படும் : தமிழக அரசு உறுதி

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். மேலும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது

என்றும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.  மேலும் அவர் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு...

*பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன

*முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்

*முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்கான நிதி ரூ.2.1 லட்சமாக உயர்த்தப்படும்

*பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.3099 கோடியும், முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு

Related Stories: