அரசு பொதுத்தேர்வில் முக்கிய பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு பொதுத்தேர்வு முக்கிய பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்களை நியமிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக 10 , 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் ஒருசில வாரங்களில் தொடங்கவிருக்கக்கூடிய நிலையில், முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக அரசு தேர்வுத்துறை இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெரும்பாலும் அரசு பணியில் இருக்கக்கூடிய அரசு ஆசிரியர்களையே இதுபோன்ற பொதுத்தேர்வுகளுக்கு கண்காணிப்பாளராகவும், அதற்கு மேற்பார்வையாளராகவும் நியமிக்க வேண்டும் என்று தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் வருகின்ற மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த பொதுத்தேர்வு பணிகளில் பொதுவாக அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்கப்பட வேண்டும் என்பது தேர்வுத்துறையின் உத்தரவாக இருக்கிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களை தேர்வு பணிகளில் பயன்படுத்த கூடாது என்பது தேர்வுத்துறை தற்போது விதித்துள்ள கட்டுப்பாடாகும். கடந்த காலங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய சில பள்ளிகளில், பொதுத்தேர்வு சமயங்களில் சில தவறுகள் நடந்தது தேர்வுத்துறையின் கவனத்துக்கு வந்தது. இதனை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்படுகின்ற போது அங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களே தேர்வு மையங்களில், தேர்வு பணிகளில் ஈடுபடுகின்றார்கள். அவ்வாறு அவர்கள் ஈடுபடும் போது சில தவறுகள் நடைபெறுவதாக தேர்வுத்துறையின் கவனத்திற்கு வந்ததை அடுத்து, தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

Related Stories: