ஷாகீன் பாக் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியை சஸ்பெண்ட்

சகரான்பூர்: டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ)  எதிராக கடந்த 50 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்று வருகின்றனர். இந்த போராட்டத்தில் உத்தர பிரதேச மாநிலம், சகரான்பூரில் உள்ள ஆஷா மாடர்ன் பள்ளியில் பணிப்புரியும் ஆசிரியை நாகித் ஜைதி கடந்த ஜனவரி 19ம் தேதி பங்கேற்றார். இந்நிலையில், நேற்று அவர் வேலை பார்க்கும் பள்ளியை முற்றுகையிட்ட 200க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களும், பாஜ நிர்வாகிகளும் அவரை கண்டித்து கோஷமிட்டனர். மேலும், அவரை பணி நீக்கம் செய்யும்படி  தலைமையாசிரியரை மிரட்டினர்.

இது தொடர்பாக ஆசிரியை நாகித் கூறியதாவது:

பள்ளியில் நேற்று இடைவேளையின் போது உள்ளே நுழைந்த 200க்கும் மேற்பட்டோர் எனக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அவர்களின் வற்புறுத்தலால் தலைமையாசிரியர் என்னை பணியில் இருந்து நீக்கியதுடன், ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தினார். பின்னர், போலீசார் மற்றும் உள்ளூர் தலைவர்களின் தலையீட்டால் தற்காலிக பணி நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: