தமிழகத்தை கொத்தடிமைகள் இல்லாதமாநிலமாக மாற்ற வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி பேச்சு

சென்னை: தமிழகத்தை கொத்தடிமை முறையே இல்லாத மாநிலமாக மாற்ற  வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி பேசினார். கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதின் 44ம் ஆண்டு நிறைவு  விழாவை கொண்டாடும் வகையில் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்பு சார்பில் சென்னையில் ேநற்று கருத்தரங்கு நடந்தது. இதில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்  தலைவருமான வினீத் கோத்தாரி, பிரிட்டிஷ் துணை உயர்நிலை ஆணையர் ஆலிவர் வாலேட் சட், ஐஜெஎம் அமைப்பின் இயக்குனர் மெர்லின் ரீட்டா, தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜசேகரன், பல்வேறு மாவட்ட சட்டப்  பணிகள் ஆணைக்குழு செயலாளர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கொத்தடிமைகள் மீட்பில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜசேகரனுக்கு துணை உயர்நிலை ஆணையர் ஆலிபர் பாலெட்சட் நினைவு பரிசு வழங்கினார். இதை தொடர்ந்து, நீதிபதி வினீத்  கோத்தாரி பேசியதாவது:கொத்தடிமை முறையை ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். கடந்தாண்டு ஜூலை மாதம் கொத்தடிமை மற்றும் மனித கடத்தலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ‘ஒன்  ஸ்டாப் கிரைசஸ்’ என்ற குழு தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல்முறையாக இதுபோன்ற தனிக்குழுவை மாவட்டம் தோறும் அமைத்த மாநிலம் தமிழகம்தான். எனவே தமிழ்நாட்டை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக  மாற்றுவதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.

Related Stories: