ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பழுதடைந்த பேட்டரி கார்கள்: நோயாளிகள் அவதி

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பேட்டரி கார் பழுதடைந்துள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருவதால் சீரமைத்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை உள்ளது. இங்கு நான்தோறும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இதயம், கல்லீரல், எலும்பு முறிவு, நரம்பியல், கை ஒட்டு உறுப்பு, கண், பல், குழந்தைகள் பிரிவு என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகளை அழைத்து வரவும், வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளை கொண்டு செல்லவும் 8 லட்சம் செலவில் புதிதாக பேட்டரி கார் வாங்கப்பட்டு பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இந்த பேட்டரி கார்கள் பழுதடைந்து காணப்படுகிறது.  இதனால் அறுவை சிகிச்சை முடிந்து நோயாளிகளை வார்டுக்கு கொண்டு செல்ல முடியாமல் பலரும் அவதிப்படுகிறார்கள்.  மேலும், பழுதடைந்த பேட்டரி காரை மருத்துவமனை நிர்வாகம் சரி செய்யாமல் அப்படியே வைத்துள்ளது.  எனவே இனியாவது பேட்டரி காரை உடனே சீரமைத்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Related Stories: