ராபர்ட் கிளைவ் ஓய்வு இல்லத்தை புதுப்பிக்க ரூ9 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை ராஜாஜி சாலையில் பதிவுத்துறைக்கு சொந்தமான 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தை புனரமைக்கும் பணி பதிவுத்துறை சார்பில் தமிழக பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை பாரம்பரிய கட்டிடத்தை பாதுகாக்கும் கோட்டம் மூலம் இந்த கட்டிடங்களை புனரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி ைவக்கப்பட்டது. அதன்பேரில், இந்த கட்டிடத்தை புனரமைக்க ரூ.9.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக 2019-2020ம் நிதியாண்டிற்கு ரூ.1.94 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.

பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் கவர்னராக இருந்த ராபர்ட் கிளைவ் ஓய்வு எடுக்க  ராஜாஜி சாலையில் இந்த இல்லம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் குதிரை கட்டும் இடம், முதல் தளத்தில் கேளிக்கை அரங்கம் இருந்தது. இந்த தளத்தில் டான்ஸ் ஆடும் போது, சத்தம் வரும் வகையில் மரத்தினால் ஆன நடன மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து அங்கு ஓய்வு அறை ஒன்றும் உள்ளது. இந்த கட்டிடத்தில் தான் பிற்காலத்தில் டிஐஜி, சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தில் தான் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories: