நெய்வேலியில் பாஜ நடத்திய போராட்டம் நடிகர் விஜய்க்கு எதிரானது அல்ல: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: “நெய்வேலியில் பாஜ நடத்திய போராட்டம் நடிகர் விஜய்க்கு எதிரானது அல்ல” என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சிஏஏவுக்கு எதிராக மதத்தலைவர்கள் களத்தில் இறங்குகிறார்கள். கிறிஸ்தவ மத தலைவர்களும் இறங்குகிறார்கள். சிஏஏ குறித்து எந்த விவாதம் எங்கு நடந்தாலும் அதில் கலந்துகொண்டு விளக்கம் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நெய்வேலியில் பாஜ நடத்திய போராட்டம் நடிகர் விஜய்க்கு எதிரானது அல்ல. பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால்தான் போராட்டம் நடத்தப்பட்டது.

படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்து நெய்வேலி என்எல்சி நிறுவனம் தவறு செய்து இருக்கிறது. ரஜினி கருத்து கூறியது தவறு என்றும், நாங்கள் இந்தந்த வகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்றும் யாராவது கூற முடியுமா?. 2009க்கு பிறகு ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தால் அனைவருக்கும் ஈரக்குலை நடுங்கும். ஆனால், இப்போது அவர் இந்தியா வருவது மோடியிடம் சிகிச்சை பெறுவதற்குதான் என்று தெரிகிறது. அதனால்தான், ஈழத்தமிழர்கள் கவுரவமாக வாழும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜபக்சே தெரிவித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: