அடுத்த மாதம் 24ம் தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் புத்துணர்வு முகாம்

கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இதை பார்ப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கோடை காலத்தை முன்னிட்டு பூங்காவில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று  தொடங்கியது. பூங்கா வனச்சரக அலுவலர் கோபக்குமார் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் சகினா இசபல், பூங்கா மருத்துவர் தர், பயிற்றுநர் சங்கரி முன்னிலை வகித்தனர்.  பூங்கா துணை இயக்குநர் கலந்துகொண்டு புத்துணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது,  ரோகினி (60), பிரக்குருதி (4) ஆகிய 2 யானைகளுக்கு  கரும்பு, வாழைப்பழம், கம்பு சாதம், ராகி, லேகியம் போன்ற ஊட்டச்சத்து உணவுகளை ஊழியர்கள் வழங்கினர்.  இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளித்தனர்.

தமிழ்நாடு வனத்துறை மூலம்  நடத்தப்படும் புத்துணர்வு முகாம் அடுத்த மாதம் 24ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து பார்வையாளர்களுக்கு பூங்கா பயிற்றுநர் சங்கரி விளக்கி கூறினார்.

மேலும் ஆனைமலையிலிருந்து ரோகினி என்ற யானையும், முதுமலையிலிருந்து பிரக்குருதி என்ற யானையும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பூங்காவில் 2 யானைகள் மட்டுமே உள்ளன.

Related Stories: