நெல்லை டவுன் வாசிக்க மீண்ட வன்னிமுத்து விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

நெல்லை:  நெல்லை டவுன் சேரன்மகாதேவி ரோட்டில் உள்ள வாசிக்க மீண்ட வன்னிமுத்து விநாயகர் கோயிலில் இன்று (5ம்தேதி) மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில் நேற்று காலை 6மணிக்கு கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவகிரகஹோமம், தனபூஜை, கோபூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணிக்கு தீர்த்தசங்கிரகணம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ரக்‌ஷாபந்தனம், கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இரவில் யந்திரஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடந்தது.

கும்பாபிஷேக விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, பிம்பசுத்தி, ரக்‌ஷாபந்தனம், இரண்டாம் காலயாகசாலை பூஜை, வேதபாராயணம், ஸ்பரிஷாகுதி, திரவியாகுதி, மகாபூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. காலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் யாத்ராதானம், விமானம், விநாயகர் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11மணிக்கு அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை நிர்வாக பொறுப்பாளர்கள் இளமதி, செந்தில் செல்வபாக்கியம், ெபாறுப்பாளர்கள் சிவசங்கரலிங்கம், சுத்தமல்லி நடராஜன், அமிர்தராஜ், ராமசந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: