CAA, NPR, NRC அவசியம் தேவை; இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை; நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

சென்னை: NPR அவசியம் தேவை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வரும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். குடியுரிமை சட்ட திருத்தத்தால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.  

நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன் என்றும் சட்டவிரோதமாக எந்த செயலும் செய்யவில்லை என்று ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். மாணவர்கள் போராட்டத்தில் இறங்கு முன் ஆலோசித்து ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்திய ரஜினி, இல்லையென்றால் மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்ள பார்ப்பார்கள் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஆபத்து வந்ததால் முதல் ஆளாக எதிர்ப்பேன் என்று தெரிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஒரு நபர் ஆணையம் சம்மன் அனுப்பினால் விளக்கம் அளிப்பேன் என்று ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: