விழுப்புரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் பெட்ரோல் பங்க் மேலாளர் குண்டு வீசி படுகொலை

விழுப்புரம்: .விழுப்புரம் கிழக்குபாண்டிரோடு கம்பன் நகர்(திருநகர்) பகுதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கு செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 11.30 மணியளவில், பெட்ரோல் பங்கு முன்பு ஒரு கார் வந்து நின்றுள்ளது. மேலும் அதன் அருகே ஒரு பைக்கில் 3 பேரும் வந்து நின்றுள்ளனர்.  பைக்கிலிருந்து இறங்கிய சுமார் 30 வயது மதிக்கதக்க வாலியர் நேராக மேலாளர் அறைக்கு சென்றுள்ளார். அங்கு சீட்டில் அமர்ந்திருந்த  சீனுவாசன்(56) மீது அடுத்தடுத்து 3 வெடிகுண்டுகளை வீசியுள்ளார். இதில் ஒரு வெடிகுண்டு மட்டும் வெடித்து சீனுவாசன் உடல் சிதறியுள்ளது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை தனது உடலில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு, தயார்நிலையில் நின்றிருந்த காரில் வந்த கும்பலோடு அந்த வாலிபர் தப்பியோடிவிட்டார். பைக்கில் வந்தவர்களும், மின்னல் வேகத்தில் சென்றனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர் பிரகாசுக்கும், ரவுடி அசார் என்பவருக்கும் மாமூல்கேட்டு கொடுக்காததால் முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளது. சிறையில் உள்ள தனது கூட்டாளிகளை வெளியே கொண்டுவர ₹25 லட்சம் பணத்தை கேட்டு பிரகாஷை, அசார் மிரட்டியுள்ளார். இந்த புகாரின்பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அசார் மட்டும் கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். ஊர்பக்கம் தலைகாட்ட முடியாமல், இந்த நிலைமைக்கு ஆளாக்கிய பிரகாஷ் மீது முன்விரோதம் ஏற்பட்டு அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி உரிமையாளர் பிரகாஷிடம் போலீசார் விசாரித்தபோது, கொலைசெய்யப்பட்ட சில நிமிடங்களுக்கு முன்புதான் நான் அங்கிருந்து புறப்பட்டு சென்றேன். நான் பெட்ரோல் பங்கில் இருக்கும் தகவலை உறுதிபடுத்தி கொண்டு தான் கொலையாளிகள் வந்துள்ளனர். எதிர்பாராத விதமாக புறப்பட்டு சென்றதால் சீனுவாசனை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Stories: