மூன்றாவது காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி 492 கோடி இழப்பு

புதுடெல்லி: அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி (பிஎன்பி) நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இழப்பு 492 கோடியாக உயரும் என்று வங்கித்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் (என்சிஎல்டி) நிலுவையில் உள்ள வராக்கடன்களும் அதிகரித்துள்ளது.  2019-20ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் இழப்பு 492.28 கோடியாக அதிகரித்துள்ளது. வராக்கடன் சுமை அதிகரித்துள்ளதால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஓர் ஆண்டுக்கு முன்பு இதே காலாண்டில் வங்கி 246.51 கோடி நிகர லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முந்தைய நிதியாண்டின் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ₹507.05 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 இந்த காலாண்டின் முடிவில் வங்கியின் மொத்த வருவாய் 15,967.49 கோடி. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வங்கியின் மொத்த வருவாய் 14,854.24 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் நேஷனல் வங்கி சமர்ப்பித்த காலாண்டு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த காலாண்டில் வங்கியின் வராக்கடன் சுமை கணக்கிடப்பட்டது. 4,445.36 கோடி வராக்கடனாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் இருந்ததைவிட அதிகம். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வராக்கடன் சுமை 2,565.77 கோடியாக இருந்தது.

 வங்கியின் ஒட்டுமொத்த வரவு செலவு கணக்கு விவரங்களைப் பார்த்தபோது, இழப்பு, மொத்தம் 501.93 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில் கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வங்கியின் லாபம் 249.75 கோடியாக இருந்தது.

 வருவாய் முன்பு 15,104.94 கோடியாக இருந்ததைவிட இந்த நிதியாண்டில் 16,211.24 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2019 டிசம்பருடன் முடிந்த காலாண்டில் வங்கியின் மொத்த கடனில் மொத்த வராக்கடன் 16.30 சதவீதமாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் வராச்கடன் சுமை 16.33 சதவீதமாக இருநத்து. வராக்கடன் சுமை 7.18 சதவீதம் குறைந்துள்ளது.

Related Stories: