சென்னை : சென்ட்ரலில் இருந்து கர்நாடகாவின் ஷிமோகாவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடகாவின் ஷிமோகாவிற்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. சென்ட்ரலில் இருந்து பிப். 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு ஷிமோகா சென்றடையும்.