மாவட்ட பொறுப்பாளர்களை மாற்றி திமுக அதிரடி நடவடிக்கை

சென்னை:  திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த டி.எம்.செல்வகணபதிக்கு பதில் வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம்,  கிழக்கு மாவட்ட பொறுப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்து வந்த டி.எம்.செல்வகணபதி,  அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சேலம் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் காந்தி செல்வன்,  அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர்கள் நியமனம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: