43 வது கடலோர காவல் படை தினம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு மலரை வெளியிட்டார்

சென்னை: 43 வது கடலோர காவல் படை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு மலரை வெளியிட்டார். இந்திய கடலோர காவல் படையானது 1977ம் ஆண்டு பிப். 1ம் தேதி 7 கப்பல்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது இந்திய கடலோர காவல் படையில் 62 விமானங்கள், கப்பல்கள், ஹோவர்கிராப்ட் படகுகள் உள்ளன. இந்தியாவில் கடல் எல்லைகள் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கடலோர காவல் படை சார்பில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.   

கடலோர காவல் படை தோற்றுவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்.1ம் தேதி கடலோர காவல் படை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி 43 வது கடலோர காவல் படை தினம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. கிழக்கு பிராந்தியம் சார்பில் சென்னையில் உள்ள கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்திய தலைமை அலுவலக வளாகத்தில் கடலோர காவல் படை தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதில்  கிழக்குப் பிராந்தியத் தளபதி எஸ்.பரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த தினத்தையோட்டி கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு ‘நாங்கள் காப்போம்’ என்பதை முழக்கமாகக் கொண்டு கடலோர காவல் படை பணியாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: