முன்னாள் நீதிபதிகளை விசாரணைக்கு உட்படுத்துவதா? எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில தலைவர் ஜஹாங்கீர் பாதுஷா வெளியிட்ட அறிக்கை:

காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் 50க்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்கள், 500க்கும் மேற்பட்ட இளம் வழக்கறிஞர்கள் கடந்த 30ம் தேதி உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பு வளாகத்துக்கு வெளியே நினைவஞ்சலி செலுத்தினர். இதில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். மிகவும் அமைதியாகவும், ஆரவாரமின்றி நினைவஞ்சலி செலுத்தும் வகையில் அந்த நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் நீதிபதிகள் கலந்து கொண்டது வருத்தமளிக்கிறது என தெரிவித்த தலைமை நீதிபதி, அதுகுறித்து உயர் நீதிமன்ற பாதுகாப்பு கமிட்டி விசாரணை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையின் அறிக்கையின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளையும் விசாரணைக்கு உட்படுத்தி உத்தரவிட்டிருப்பது ஜனநாயகத்துக்கு பேராபத்தானதாகும்.

Related Stories: