சென்னையில் கதிர்வீச்சு புற்றுநோய் இயல் துறை கட்டிட வளாக திறப்பு விழா: முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை:  தமிழக சுகாதாரத்துறை சார்பில் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோய் வளாக திறப்புவிழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதில் ரூபாய் 6 கோடி மதிப்பிலான கதிர்வீச்சு புற்றுநோய் வளாகம், 22 கோடி மதிப்பில் லீனியர் ஆபரேட்டர் கருவி, சி.டி.சி சிவிலேட்டர் கருவி உள்ளிட்ட கருவிகள் திறந்து வைக்கப்பட்டது. இதேபோல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 20 கோடி மதிப்பிலான லீனியர் ஆபரேட்டர் கருவி தற்போது காணொளி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் திறந்து வைத்தனர்.

சி.டி.சி சிவிலேட்டர் கருவி மூலமாக துல்லியமாக புற்றுநோய் கட்டிகளை கண்டறிந்து மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காக தற்போது தமிழகத்தில் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான பல்வேறு கருவிகள் உள்ள நிலையில், தற்போது புதிதாக இந்த கதிர்வீச்சு புற்றுநோய் வளாகம் திறக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் கட்டிகளை கண்டறிவதற்கு தனியார் மருத்துவமனையில் சுமார் 1 லட்சம் வரை செலவாகும் நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலவச காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை முறையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

Related Stories: