அனுமதியின்றி போராட்டம் 600 பேர் மீது வழக்கு

தண்டையார்பேட்டை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே  முஸ்லிம் பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்,  மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி  வரை நடந்தது. அனுமதி இல்லாமல் போராட்டம் நடைபெற்றதால் அவர்களை கலைந்து செல்லும்படி ேபாலீசார் எச்சரித்தனர். ஆனால், அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக பெண்கள் உட்பட 600 பேர் மீது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: