ஸ்டான்லி மருத்துவமனையில் கை தானம் விழிப்புணர்வு

தண்டையார்பேட்டை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கை தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மருத்துவ மாணவிகள் கை தானம் குறித்து சிறு நாடகம் நடத்தினர். இதுகுறித்து அறுவை சிகிச்சை  துறை முதல்வர்கள் பூபதி மற்றும் நெல்லையப்பர் கூறியதாவது: தற்போது வரை 130 பேர் விபத்தினால் கைகளை இழந்து ஸ்டான்லி அரசு மருத்துமனையில் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து 7800 பேருக்கு அறுவை சிகிச்சை மூலமாக கை பொருத்தி உள்ளோம். இந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு 30 மருத்துவர்கள் 24 மணி நேரமும்  தயார் நிலையில் உள்ளோம்.

மூளைச்சாவு அடைந்தவர்கள்  பல்வேறு உறுப்புகளை தானம் செய்யும் நிலையில், கை தானம்  செய்யவும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .  இதுபோல் கை தானம் செய்வதனால் கை இல்லாதவருக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு கூறினர். நிகழ்ச்சியில் மருத்துவ பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: