தங்கம் விலையில் மீண்டும் அதிரடி: ஒரே நாளில் சவரன் ரூ.304 அதிகரிப்பு: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.304 அளவுக்கு உயர்ந்தது. தங்கம் விலை கடந்த 2  மாதங்களாக கடும் உயர்வை சந்தித்து வந்தது. கடந்த 8ம் தேதி ஒரு சவரன் ரூ.31,176க்கு விற்கப்பட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைவதும், அதன் பிறகு அதே விலையில்  அதிகரிப்பதுமான போக்கு காணப்பட்டது. கடந்த 21ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.30,520, 22ம் தேதி ரூ.30,504, 23ம் தேதி ரூ.30,488க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3,824க்கும் சவரன் ரூ.30,592க்கும் விற்பனையானது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,862க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.30,896க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை  ஒரே நாளில் சவரன் ரூ.304 அளவுக்கு உயர்ந்திருப்பது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது  அவர்களுக்கு  கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக நகை வாங்குவோர் கூறியுள்ளனர்.

Related Stories: