புழல்: புழல் ஜிஎன்டி சாலை மற்றும் அம்பத்தூர் சாலை ஆகியவை இணையும் பகுதியில் புழல் சிறைச்சாலை அதிகாரிகள் குடியிருப்புகள், புழல் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்த குடியிருப்பின் சுற்றுச் சுவர்களில் சினிமா, அரசியல் பொது நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு விளம்பர போஸ்டர்கள், குறிப்பாக ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக இருந்தது. இதை அறிந்த அப்போதைய சென்னை சரக சிறைத்துறை தலைவர் ராஜேந்திரன் தீவிர முயற்சி எடுத்து, சிறைச்சாலையில் உள்ள தண்டனை கைதிகளை கொண்டு அந்த சுவரை சுத்தம் செய்து, வெள்ளையடித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விதவிதமான படங்களுடன் கருத்துக்களை கொண்ட ஓவியங்கள் வரைய செய்தார்.