கோவையில் உள்ள 250 வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க சென்னை உயர்திநீமன்றம் தடை

சென்னை:  கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வு ஆணையிட்டுள்ளது. சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் தனது நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள 250 வீடுகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி 250 வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டனர். இந்த மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டதை எதிர்த்து செல்வராஜ், மாரிமுத்து உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுப்ரமணிய பிரசாத்து அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களது தரப்பு வாதத்தை கேட்காமல்  வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டினர். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: