பாம்பனில் புதிய ரயில் பாலப்பணி முதன்மை நிர்வாக இயக்குனர் ஆய்வு

ராமேஸ்வரம்: பாம்பனில் அமைய உள்ள புதிய ரயில்வே பாலப்பணிகளை, ரயில்வே பாதுகாப்பு முதன்மை நிர்வாக இயக்குனர் நரேஷ் சந்த் கோயல் தெரிவித்தார். ராமேஸ்வரத்திற்கு நேற்று வந்த இந்தியன் ரயில்வே பாதுகாப்பு முதன்மை நிர்வாக இயக்குனர் நரேஷ் சந்த் கோயல் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். ரயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள், ரயில் பெட்டிகள், ரயில்வே அலுவலக அறைகள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.பின்னர் டிராலி மூலம் பாம்பன் ரயில் பாலத்தில் சென்று ஷெர்ஜர் தூக்குப்பாலத்தை பார்வையிட்ட பின், புதிய ரயில் பாலம் கட்டும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.பின்னர் அவர் கூறுகையில், ‘‘ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

ரயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. அனைத்து பதிவேடுகளும் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பாம்பன் ரயில் பாலம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி 10 கி.மீ வேகத்தில் பாம்பன் பாலத்தில் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: