திருமணமான 4 மாதத்தில் சோகம் போலீஸ்காரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை: தம்பி பரபரப்பு புகார்

சென்னை: பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கடலூர் மாவட்டம் நெல்லிதோப்பு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை ஆர்.ஏ.புரம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் அருள் (38). இவர் காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் 16ம் தேதி அருளுக்கு எனது சகோதரி ராஜேஸ்வரியை திருமணம் செய்து வைத்தோம். திருமணத்திற்கு 10 சவரன் நகை வரதட்சனையாக கொடுத்தோம். திருமணமான 10 நாட்களில் பைக், பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மற்றும் பர்னிச்சர் கேட்டார். அதையும் நாங்கள் வாங்கி கொடுத்தோம். ஒரு மாதம் கழித்து, ‘‘நான் காவல் துறையில் உதவி ஆய்வாளராக ஆக போகிறேன். எனக்கு கார் வேண்டும்’’ என்று எனது அக்காவிடம் கூறினார்.

அதற்கு நாங்கள், ‘‘திருமணத்திற்கு வாங்கி கடனே இன்னும் அடைக்க முடியாமல் இருக்கிறோம்’’ என்று கூறினோம். அதற்கு எனது அக்காவை மது குடித்துவிட்டு வந்து தினமும் அடித்து துண்புறுத்தி வந்தார். சிறிது காலம் சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தோம். ஆனால் எனது மாமா அருள் எனது அக்காவிடம், ‘‘எனது அண்ணன் மனைவி எவ்வளவு அழகாக இருக்கிறாள் பார்’’ என தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி அடித்துள்ளார். இதனால் எனது அக்கா என்னிடம் கடந்த 20ம் தேதி செல்போனில் அழைத்து இங்கிருந்து அழைத்து செல்லும் படி கூறி அழுதார். எனது கணவரின் அண்ணன் மனைவி வென்னிலாவும் என்னை பார்த்து, ‘‘நீ என்ன கொண்டு வந்தாய். நீ வீட்டைவிட்டு வெளியே போ. நாங்கள் சந்தோசமாக இருப்பதற்கு நீ தான் இடைஞ்சலாய் இருக்கிறாய். நீ வீட்டை விட்டு வெளியே போ அல்லது செத்துவிட்டால் சொத்து அனைத்தும் எனக்கே கிடைக்கும்’’ என்று கூறி கொடுமைப்படுத்துகிறார் என்று கூறினார்.

அதற்கு நாங்கள், ‘‘ஊரில் இருந்து புறப்பட்டு வருகிறோம்’’ என கூறினோம். பிறகு எனது மாமா அருள் நேற்று முன்தினம் எனது பெரியப்பா தேவராஜிக்கு போன் செய்து, ‘‘உங்கள் மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள்’’ என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார். எனவே எனது அக்காவை அடித்து துன்புறுத்தி கொடுப்படுத்திய அருள் மீதும் பெரும் மன உளச்சலுக்கு ஆளாக்கிய வென்னிலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 மாதங்கள் மட்டுமே ஆவதால் போலீசார் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தவிட்டுள்ளனர்.

Related Stories: