புதிய தொழில்நுட்பம் மூலம் ஆண்டுக்கு ராணுவத்துக்கு தேவையான 700 கனரக இன்ஜின் தயாரிக்கலாம்: வாரிய தலைவர் பேட்டி

சென்னை: புதிய தொழில்நுட்பம் மூலம் 700 இன்ஜின்களை தயாரிக்கலாம் என்றும், இதனால் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் ஆயுத படைக்கல வாரிய தலைவர் தெரிவித்தார். சென்னை ஆவடியில் உள்ள ராணுவ பயன்பாட்டிற்கான பாகங்கள் தயாரிக்கும் கனரக வாகன தொழிற்சாலையில் உள்ள இன்ஜின் தொழிற்சாலையில் (Flexibe Manhufacture system) புதிய தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டு பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை வாரிய தலைவர் ஸ்ரீஹரி மோகன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

நாட்டிலேயே முதல் எப்எம்எஸ் இயந்திரம் உடைய பெருமை ஆவடி தொழிற்சாலையை சாரும். இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் டாங்கிகளுக்கு தேவையான இன்ஜின்களை தயாரிக்கலாம். இதுவரை ஒரு வருடத்திற்கு 450 முதல் 500 இன்ஜின்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. இனி வருடத்திற்கு 650 முதல் 700 இன்ஜின்கள் வரை தயாரிக்க முடியும். இதுபோன்ற பணிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் ஏற்கனவே பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: