சென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதுக்குட்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதற்காக தமிழகம் முழுவதும் 43,051 மையங்ள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறை சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் 1438 நிரந்தர மையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையம், வழிபாட்டுதலம், மார்க்கெட் பகுதிகளில் 165 மையங்கள், செங்கல் சூளைகள், கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் 45 மையங்கள் என்று மொத்தம் 1645 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என கூறப்படுகிறது. ரயில், பேருந்து மற்றும் விமான நிலையங்களில் 1,652 மையங்களும் 1000 நடமாடும் போலியோ சொட்டு மருந்து முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் என  43,051மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.  

இதன்படி இரண்டு பணியாளர்கள் ஒரு குழுவாக பிரிக்கப்பட்டு வீடு வீடாக ஆய்வு செய்வார்கள். சென்னையில் 300 முதல் 400 வீடுகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த ஆய்வின் போது சொட்டு மருந்து வழங்கப்பட்ட வீடுகளில் x குறியீடும், வழங்கப்படாத வீடுகளில் p குறியீடும் போடப்படும். மொத்தம் 7 ஆயிரம் ஊழியர்கள் இந்த முகாமில் பணியாற்ற உள்ளனர். நாளை நடைபெறும் முகாமில்களில் 7 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

Inauguration of Polio Prevention Drip Camp in Chennai

Related Stories: