அமைச்சர் பேட்டி தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு உடல் பரிசோதனை

புதுக்கோட்டை: சீனாவில் கொரனோ வைரஸ் தாக்குதல் எதிரொலியாக தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு முற்றிலுமாக உடல் பரிசோதனை செய்யப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் நாளை (இன்று) 70 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 43051 மையங்களில் வழங்கப்படுகிறது. சீனாவில் தற்போது கொரனோ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவு உள்ளது. மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் குறிப்பாக சீனாவில் இருந்து வரும் பயணிகள் முற்றிலுமாக உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: