திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த வெங்கையா நாயுடு: கடும் எதிர்ப்பால் படம் மாற்றம்

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு காவி உடை அணிவித்து டிவிட்டரில் கருத்து வெளியிட்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கடும் எதிர்ப்பை அடுத்து படத்தை மாற்றினார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையில் கழுத்தில் ருத்ராட்சம் மாலை, நெற்றியில் திருநீற்று பட்டை, குங்கும பொட்டுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை வெங்கையா நாயுடு பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, காவி அணிந்த திருவள்ளுவர் படத்தை நீக்கும்படியும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிடுமாறும் பலர் டிவிட்டரில் கருத்து பதிவிட்டனர். இதனையடுத்து மீண்டும் எந்த ஒருமத அடையாளமும் இன்றி, வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை வெங்கைய்யா நாயுடு பதிவிட்டார். இதன் பின்னர் சிறிது நேரத்தில், காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெங்கையா நீக்கினார்.

Related Stories: