2019ம் ஆண்டிற்கான தமிழ் புத்தாண்டு விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: 2019ம் ஆண்டிற்கான சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருது பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும். தமிழ்தாய் விருது தொகையாக ஒரு அமைப்புக்கு மட்டும் ரூ.5 லட்சம், நினைவு பரிசு, கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தமிழ்த்தாய் விருது- சிகாகோ தமிழ் சங்கம், கபிலர் விருது- புலவர் வெற்றியழகன்,உ.வே.சா. விருது -வே.மகாதேவன்,கம்பர் விருது-சரசுவதி ராமநாதன்,சொல்லின் செல்வர் விருது- சிந்தனை கவிஞர் கவிதாசன்,ஜி.யு.போப் விருது- மரிய ஜோசப் சேவியர்,உமறுப்புலவர் விருது-லியாகத் அலிகான், இளங்கோவடிகள் விருது-கோ.திருஞானசம்பந்தம், அம்மா இலக்கிய விருது- உமையாள் முத்து,சிங்காரவேலர் விருது-சோ.கா.சுப்ரமணியன்,மறைமலையடிகளார் விருது-ப.முத்துக்குமாரசுவாமி, அயோத்திதாசப் பண்டிதர் விருது - வே.பிரபாகரன், முதலமைச்சர் கணினி தமிழ் விருது -த.நாகராசன்,சிறந்த மொழி பெயர்கள் விருது-சா.முகம்மது யூசுப்,க.ஜ.மஸ்தான் அலி, சிவ.முருகேசன், ந.கடிகாசலம், மரபின் மைந்தன்,வத்சலா, முருகுதுரை, வே.நாராயணன், பிருந்தா நாகராசன், அ.மதிவாணன் உள்ளிட்ட 10 பேர். உலக தமிழ் சங்க விருதுகள் - பெ.ராசேந்திரன், மலேசியா (இலக்கிய விருது), முத்து கஸ்தூரிபா, பிரான்ஸ் (இலக்கண விருது), சுபதினி ரமேஷ், இலங்கை (மொழியியல் விருது). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: