முதல்வர் தலைமையில் 20ம் தேதி அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 20ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 2020ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதையடுத்து 3 நாள் கவர்னர் உரை மீது விவாதம் நடைபெற்று 9ம் தேதி பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக ஆலோசனை நடத்த, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 20ம் தேதி (திங்கள்) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் நேற்று அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: