கோடை சீசனுக்காக சிம்ஸ் பூங்காவில் 2.60 லட்சம் மலர் செடிகள் நடவு பணி

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி மே மாதம் நடைபெறுவதையொட்டி 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் செடிகள் நடவும் பணி துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் தோட்ட கலைத்துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பழக்கண்காட்சி நடந்து வருகிறது. இந்தாண்டு 61வது பழக்கண்காட்சி வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்கா தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மலர்செடிகள் நடவும் பணி துவங்கியது. இவ்வாண்டு பழக்கண்காட்சிக்காக 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக சால்வியா, ஆன்ட்ரியம், பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி பிளக்ஸ், ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, கேன்டிடப்ட், டயான்தஸ், கிளார்கியா, ஜின்னியா, ஸ்வீட் வில்லியம், செலோசியா, அமரான்தஸ், பிரிமுளா, கார்னேஷன், கிளியோம், சூரியகாந்தி, ஆஸ்டர் லுபின் மற்றும் டேலியா போன்ற 60க்கும் மேற்பட்ட செடி வகைகள் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நடவு செய்யும் பணி துவங்கியுள்ளது. 

இதில் முதற்கட்டமாக டேலியா மற்றும் பிளாக்ஸ் செடிகள் தோட்டகலைத்துறை உதவி இயக்குநர் ராஜ் கோபு நடவு செய்து பணியை துவங்கி வைத்தார். குறிப்பாக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு இயற்கை 

வேளாண் முறையில் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: