அண்ணாநகர் மெட்ரோ நிலையத்தில் அலங்கார கண்ணாடிகள் விழுந்து விபத்து

சென்னை: அண்ணாநகர் டவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் டைல்ஸ், அலங்கார கண்ணாடிகள் திடீரென விழுந்து விபத்திற்கு உள்ளானது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில்  மெட்ரோ ரயிவேவின் முதல் திட்டத்தில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளது. இந்தநிலையில், அண்ணாநகர் கிழக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பயணிகள் டிக்கெட் எடுக்கும் இடத்திற்கு அருகில் இருந்த அலங்கார கண்ணாடி ஒன்று திடீரென உடைந்து பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. இதை எதிர்பாராத அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து ஊழியர்கள் உடைந்த கண்ணாடி துண்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  

இதன்தொடர்ச்சியாக நேற்று அண்ணாநகர் டவர் நிலையத்தின் நடைமேடை 2ல் சுவரில் ஒட்டப்பட்டிருந்த பெரிய அளவிலான டைல்ஸ் உடைந்து கீழே விழுந்தது. இச்சம்பவம் குறித்து ஊழியர்கள் தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அப்பகுதிக்கு பயணிகள் யாரும் செல்லாத வகையில் எச்சரிக்கை பலகைகளை வைத்தனர். அடுத்தடுத்த நடைபெற்ற இச்சம்பவம் ஊழியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: