சென்னை மாநகர பேருந்துகளில் மாதாந்திர பயண அட்டை கட்டணத்தை வங்கி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி பெறலாம்: போக்குவரத்து கழகம்

சென்னை:  சென்னையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் அரசு பஸ் பாஸ் பெறலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பயணச்சலுகை அட்டைவிற்பனை மையங்களில் ஸ்வைப்பிங் மெஷின் வாயிலாக பணம் செலுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அதிக அளவில் பேருந்தை பயன்படுத்தக்கூடிய பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

இதனால் அதனை தொடர்ந்து மாதாந்திர பாஸ் அதாவது 1000 ரூபாய் செலுத்தி ஏசி வாகனங்கள் அல்லாத பிற வாகனங்களில் பயணம் செய்வதற்கான சலுகையை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து மாதம்தோறும் ரூ.1000 செலுத்தி பாஸ் எடுத்து பயணிகள் பயணம் செய்து வந்தனர். அதில் தற்போது 2 லட்சத்து 66 ஆயிரம் பயணிகள் நேரடியாக பணம் கொடுத்து தங்களது பயண சலுகை அட்டவணையை பெற்றுக்கொண்டு வருகின்றனர்.

ஆகவே அவர்களின் பொதுநலன் கருதி மின்னணு பரிவர்த்தனை ஊக்குவிக்கும் வகையில் மாநகர போக்குவரத்து கழகமானது வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்படக்கூடிய 29 விற்பனை மையங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் ஸ்வைப்பிங் மெஷின் வாயிலாக பணம் செலுத்தி மாதாந்திர பயணச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: