அதிகரிக்கும் வராக்கடனே வளர்ச்சிக்கு எமனாகிறது: வெங்கடாச்சலம், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர்

வங்கிகளில் அதிகரித்து வரும் வராக்கடனே இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை தடுத்த எமன். கடந்த சில ஆண்டுகளை பார்க்கையில் ஆண்டுக்கு ஆண்டு வராக்கடன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே  இருப்பதை பார்க்கிறோம். இதற்கு கடுமையாக நடவடிக்கை எடுத்து வசூலித்து, மேலும் புதிய கடன்களை கொடுத்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மாறாக, வராக்கடன்களை வசூலிக்காமல் ரத்து செய்வது, தள்ளுபடி செய்வது போன்றவற்றால் புதிய கடன்கள் கொடுப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கடந்த வராக்கடனுக்காக ஒதுக்கிய கடன் 2010ல்  ரூ.11,109 கோடி, 2011ல் ரூ.17,796 கோடி, 2012ல் ரூ.15,550 கோடி, 2013ல் ரூ.27,279 கோடி, 2014ல் ரூ.33,710 கோடி, 2015ல் ரூ.49,018 கோடி, 2016ல் ரூ.57,585 கோடி 2017ல் ரூ.81,684 கோடி, 2018ல் ரூ.1,28,230கோடி, 2019 1,90,849 கோடி என மொத்தம் 6 லட்சத்து 18 ஆயிரத்து 340 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதை, வசூலித்து இருந்தால் ரூ.6.18 லட்சம் கோடியை மறுமுதலீடு செய்து இருக்கலாம். விவசாயத்துக்கு கடன் கொடுத்திருக்கலாம், சிறு தொழிலுக்கு கொடுத்திருக்கலாம், பல தொழில் வளர்ச்சிக்கு கடன் கொடுத்திருக்கலாம். இது, பொருளாதாரத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 

வங்கித்துறையை விரிவுப்படுத்தி மக்களது சேமிப்புகளை பெற்று, கூடுதல் கடன்களை பெற்று உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, ஆயிரக்கணக்கான வங்கிகளை மூடுவதன் மூலம் மக்கள் சேமிப்பை பெறுவதிலும், மக்களுக்கு கடன் கொடுப்பதிலும் குறைவு ஏற்படும். இதனால், வங்கிகள் இணைப்பு என்பது பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது. வங்கி வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இதனால், வங்கிகளை இணைப்பதன் மூலமும், வங்கிகளை குறைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது தடைபடும். வங்கிகளை இணைப்பதால் பெரிய வங்கிகளாக மாறுவதால் பெரிய முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் கடன் தொகை அதிகரிக்கப்படும். ஏற்கனவே, வராக்கடன் இருக்க கூடிய பின்னணியில் மீண்டும் பெரிய வராக்கடனாக மாறி இன்னும் சிக்கலில் தவிக்கக்கூடிய ஆபத்ைத நோக்கி தான் செல்லும். முதலில் பொருளாதார தேக்கம் இருக்கிறது, வளர்ச்சி இல்லை என்பதற்கு காரணம், நாட்டின் உற்பத்தி குறைகிறது. அது ஏன் குறைகிறது.  அதற்கு தேவை என்பது குறைகிறது.

தேவை ஏன் குறைகிறது என்று பார்க்கும் போது மக்களிடம் வாங்கும் சக்தி குறைகிறது. அப்படியெனில் மக்களிடம் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். வருமானம் அதிகரித்தால் வாங்கும் சக்தி அதிகமாகும். வாங்கும் சக்தி அதிகமானால், தேவை அதிகமாகி தேவை அதிகமாகும். தேவை அதிகமாகும் போது உற்பத்தி அதிகமாகும். எனவே, விவசாயத்துக்கோ, சிறு தொழிலுக்கோ கூடுதலாக முன்னுரிமை கொடுத்து அதை வளர்ப்பதற்கு அரசு தொகையை முதலீடு செய்தால், மிக விரைவிலேயே பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். ஆனால், சிறு தொழிலுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்கின்றனர். விவசாயத்துக்கு மூலதனத்தை குறைக்கின்றனர். அப்படி இருக்கும் போது 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்றைக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. வேலை இல்லை என்றால் வருமானம் இல்லை. வருமானம் இல்லை என்றால் வாங்கும் சக்தி கிடையாது. எனவே, அரசு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் திட்டத்தையும், வருமானம் அதிகரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

Related Stories: