5 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகா போலீஸ் அதிரடி: கவுரி லங்கேஷ் கொலை குற்றவாளி கைது: ஜார்க்கண்டில் சிக்கினான்

பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கின் முக்கிய  குற்றவாளியை ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் முற்போக்கு  எழுத்தாளராகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும் இருந்த எம்.எம்.கல்புர்கி,  கடந்த 2015 ஆகஸ்ட் 30ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  அவரின் கொலைக்கு நியாயம் கேட்டு பல்வேறு முற்போக்கு சிந்தனையாளர்கள்  போராட்டம் நடத்தி வந்தனர். அதில் பெண் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேசும் ஒருவர். கடந்த 2017  ெசப்டம்பர் 5ம் தேதி கவுரி லங்கேஷையும் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு  கொலை செய்தனர். மேற்கண்ட இருவரின் கொலையும்  கர்நாடகாவில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கு விசாரணை நடத்தும் பொறுப்பு  சிறப்பு விசாரணை படை (எஸ்ஐடி)யிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் தீவிரமாக  குற்றவாளிகளை தேடி வந்தனர். இதுவரை, இந்த படுகொலை தொடர்பாக 11 பேரை கைது  செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையின் முக்கிய  குற்றவாளி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளதாக தெரியவந்தது. அதை தொடர்ந்து  சிறப்பு படையினர், ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டத்தில் உள்ள கட்ரஷ்கர்  என்ற குக்கிராமத்தில் பதுங்கி இருந்த ரிஷிகேஷ் டிபோடிகர் (44) என்பவனை  நேற்று முன்தினம் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில்  கவுரி லங்கேஷ் கொலை மட்டுமின்றி, மேலும் சில முற்போக்கு  சிந்தனையாளர்கள் மற்றும் இந்துத்துவா எதிர்ப்பாளர்களின் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ரகசிய கோட் வேர்டு:

கைது  செய்யப்பட்டுள்ள ரிஷிகேஷ் டிபோடிகரின் வீட்டில் ேபாலீசார் சோதனை நடத்தியதில் பல  முக்கிய ஆவணங்கள், சிடி., டைரிகள், பெரிய நோட்டில் எழுதி வைத்திருந்த சில  குறிப்புகள் கிடைத்துள்ளன. அவரது செல்போனில் பதிவாகி இருந்த வாய்ஸ்  மெசேஜில் ரகசிய கோட் வேர்டு பயன்படுத்தி பேசியுள்ளதும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவன் 4 சிம் கார்டுகள் பயன்படுத்தியுள்ளான்.

Related Stories: