டெல்லி ஜே.என்.யூ வளாகத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது: மாணவர்கள் சங்க தலைவர் ஆயிஷி கோஷ் பேட்டி

புதுடெல்லி: டெல்லி ஜே.என்.யூ வளாகத்தில் குண்டர்களால் தான் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாக மாணவர்கள் சங்க தலைவர் ஆயிஷி கோஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் இருப்பதாக டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ள படத்தில் இருப்பது, தான் அல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி போலீஸ் பாரபட்சமாக விசாரணை நடத்தி வருவதாக ஆயிஷி கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செயல்பட்டு வரும் ஜே.என்.யு. என சுருக்கமாக அழைக்கப்படும் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் ஜனவரி 5ம் தேதி இரவு முகமூடி அணிந்த மர்மக் கும்பல் அங்கிருந்த மாணவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் எழுந்தது.

தன்னை கொலைவெறியுடன் தாக்கிய நபரை நிச்சயம் அடையாளம் காட்ட முடியும் என ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் கொலைவெறி தாக்குதலுக்குள்ளான மாணவி ஆயிஷா தெரிவித்துள்ளார்.

Related Stories: