சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்துள்ள தர்பார் திரைபடத்தை இணைய தளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தர்பார் படத்தை இணையத்தளங்களில் வெளியிட தடைக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.