பொங்கல் பண்டிகை எதிரொலி: பாசி பருப்பு தேவை அதிகரிப்பு: கிலோவுக்கு 17 வரை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு பாசி பருப்பு தேவை அதிகரித்துள்ள நிலையில், வரத்து குறைவால், அதன் விலை ஒரே வாரத்தில் கிலோ 17 வரை உயர்ந்துள்ளது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாசி பயிறு, பருப்பின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மார்க்கெட்டுக்கு வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை  மார்க்கெட்டுகளுக்கு வாரத்துக்கு 150 லாரிகளில் விற்பனைக்கு வந்து கொண்டிருந்த பாசி பருப்பின் வரத்து படிப்படியாக சரிந்து தற்போது, 50 லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால், பாசி பருப்பின் தேவை அதிகரித்துள்ள நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலை உயர்ந்து வருகிறது.

கடந்த மாதம் 27ம் தேதி கிலோவுக்கு 10 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் கிலோவுக்கு 7அதிகரித்து, ஒரே வாரத்தில் கிலோவுக்கு 17 உயர்ந்துள்ளது.பாசி பருப்பு முதல் ரகம் கிலோ 102க்கு விற்றது, தற்போது 119 ஆகவும், இரண்டாம் ரகம் 90ல் இருந்து 107 ஆகவும் உயர்ந்துள்ளது. பாசி பருப்பு விலையில், ஒரே வாரத்தில் கிலோவுக்கு 17 உயர்ந்து இருப்பது, இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: