சென்னை ஐஐடியில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்துக்கு முன்னாள் மாணவர் ரூ.1 கோடி நன்கொடை

சென்னை: சென்னை ஐஐடியில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்துக்கு முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். சென்னை ஐஐடியில் செயல்படும் பல்வேறு துறைகள் தொழில்துறையினருடன் கைகோர்த்து அவர்களின் பிரச்னைகளை தீர்க்க தொழில்நுட்ப ரிதியான உதவிகள், ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். 1959ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ஐஐடியின் மாணவர்கள் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். சிலர் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் ஒருவர் ஐஐடியின் இன்ஜினியரிங் டிசைன் துறைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இதன்மூலம் இன்ஜினியரிங் டிசைன் துறையில் அதிநவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் செயல்பட உள்ளது. ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர் பெயர் வெளியிட விரும்பவில்லை என ஐஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: