அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது: ஆளுநருக்கு பேராசிரியர் கூட்டமைப்பு கடிதம்

சென்னை: உயர் சிறப்பு அந்தஸ்து பெற்றப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற கூடாது என தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது.  உயர் சிறப்பு அந்தஸ்து கிடைக்க பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களைச் சேர்த்து தனிப் பல்கலைக்கழகமாக மாற்றவும், மற்ற பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க தனிப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிடவும், தமிழக அரசு பரிசீலித்துவருகிறது.  அவ்வாறு செய்யும் போது அண்ணா உயர் சிறப்பு மையம் என அதன் பெயரை மாற்ற உள்ளதாக தகவல் வெளியானது.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அவற்றில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் பல்கலைக்கழகங்கள் பிரிக்கப்பட்டபோது,  புதிதாக உருவான பல்கலைக்கழகங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டதையும் மேற்கோள் காட்டியுள்ளனர்.  தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து  வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.  ஆனால் மாநில அரசு இடஒதுக்கீடு நடைமுறைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதிசெய்வதற்க்காக இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளது.

Related Stories: