தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாத வேலை நிறுத்தப் போராட்டம்: பெரும்பாலான இடங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல், சமூக பாதுகாப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுத்தல், வங்கிகள் இணைப்பை கைவிடுதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட  12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பிடும் படியான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்குகின்றன.

கேரள மாநிலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதால், கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை, தேனி மாவட்டம் குமுளி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்ததால், புதுச்சேரி மாநிலத்தில் பேருந்துக்கள், டெம்போக்கள் இயங்கவில்லை. எனவே புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தமிழக பேருந்துகள் மிக குறைந்த அளவு பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: