மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்த வேண்டும்: டெல்லியில் விக்கிரமராஜா பேட்டி

சென்னை: அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு மாநாட்டை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று துவக்கி வைத்தார். தமிழகத்தின் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.பின்னர் அவர் அளித்த பேட்டி: ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய அளவில் சில்லறை வணிகம் முற்றிலும் அழியும் நிலை உருவாகியுள்ளது. இதனால் வேலை இழப்பு ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் பொருளாதாரமும் பாதிப்படைகிறது. பிப்ரவரி 11ம் தேதி தமிழகத்தில் 108 இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்காவிட்டால் மே 5ம் தேதி நடத்தப்படும் 37வது வணிகர் தின மாநாட்டில் ஆலோசித்து போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்படும்.

Related Stories: