ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நிறுத்தம்: தமிழக அரசு மெத்தனம் என குற்றச்சாட்டு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தமிழக அரசின் மெத்தன போக்கால் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறாமல் நிலையில் உள்ளது.  ராஜபாளையம் பி.ஏ.சிஆர் சாலை பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் துவங்கி கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகியும் தொடர்ந்து நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து நகர் பொதுமக்கள் கூறுகையில், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்டன. ரயில்வே மேம்பாலத்திற்காக தேர்வு செய்த இடங்களுக்கான தொகையை நிர்ணயம் செய்யாமல் தமிழக அரசு கிடப்பில் போட்டது. எனவே பணிகள் செயல்படாத நிலையில் இருந்து வருகிறது. இடம் தொடர்பாக கூட்டம் நடத்தி அதற்குரிய பணத்தை செலுத்தி இடத்தை எடுப்பதாக கூறி பல மாதங்கள் ஆகின்றன. ஆனால் எந்த ஒரு பதிலையும் இன்றுவரை தெரிவிக்காத நிலையில்  ரயில்வே மேம்பால பணிகளை நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பொதுமக்களும் பள்ளி மாணவ, மாணவிகளும்  போக்குவரத்திற்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது தேர்வு நடைபெறும் வேளையில் சாலையை கடந்து செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது. வரும் காலங்களில் அரசு தேர்வு நடைபெற உள்ள நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு  தேர்வு எழுத செல்ல முடியாத நிலை ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் தொழிற்சாலைகளுக்கு செல்லக்கூடிய தொழிலாளர்களின் நிலைமையும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தற்போது ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் சாலையில் இருபுறமும் வீடுகள் மற்றும் கடைகளை காலி செய்துவிட்டு அப்பகுதியே வெறிச்சோடி காணப்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. ஆகவே உடனடியாக இப்பணிகளை விரைவில் முடிக்க சாலையின் இருபுறமும் அளவு செய்யப்பட்ட இடங்களை உடனடியாக தமிழக அரசு  ரயில்வே மேம்பால பணிக்காக சாலையின் இருபுறமும் தேர்வு செய்யப்பட்ட இடத்தை எடுத்து கொடுக்க வேண்டும்.  இந்நிலை தொடர்ந்தால் அனைவரையும் திரட்டி போராட்டம் நடத்துவதற்கு தயாராக உள்ளோம் என தெரிவித்தனர்.

Related Stories: